×

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது குண்டு வீசி தாக்குதல்

ஸ்ரீநகர்,: காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள்  கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், குல்காம் மாவட்டத்தின் நெஹமா பகுதியில் உள்ள 34 ராஷ்டிரிய ரைபிள் முகாம் மீது நேற்று மாலை தீவிரவாதிகள் திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகின்றனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...