×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மனித உரிமை ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கெடு

புதுடெல்லி: தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சபரிஸ் என்பவர் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘துப்பாக்கிச்சூடு பற்றி தமிழக போலீசுக்கு  தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதே  தமிழக போலீசார்தான். அவர்கள் ஆதாரங்களை அழித்து விடக்கூடும் என்பதால், மனித உரிமைகள் ஆணையமே தனியாக ஒரு சிறப்பு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு நீதிபதி ராஜீவ் ஷக்திர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். மனுதாரர் வரும் 29ம் தேதி  தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும். துப்பாக்கிச்சூடு பற்றி தனிக்குழு அமைத்து சிறப்பு விசாரணை நடத்தப்படுமா? இல்லையா? என்பதை மனுதாரருக்கு அன்றயை தினமே தனது இறுதி முடிவை மனித உரிமை ஆணையம் தெரிவிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!