×

ராஜஸ்தான் முதல்வர் என்ற தகுதியில் இரண்டு பங்களாவை ஆக்ரமித்து இருக்கிறார் வசுந்தரா ராஜே: கவர்னரிடம் பாஜ எம்எல்ஏ புகார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் முதல்வர் வசுந்தரா ராஜே இரண்டு பங்களாக்களை ஆக்ரமித்து இருப்பதாக கவர்னரிடம் பா.ஜனதா எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங்கிடம், பா.ஜனதா அதிருப்தி எம்எல்ஏ கன்சியாம் திவாரி ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது; ராஜஸ்தான் முதல்வர் வசந்தரா ராஜே தற்போது முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான எண் 8 வீட்டில் குடியிருந்து வருகிறார். ஆனால், எண் 13 வீட்டையும் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்ரமித்து இருக்கிறார்.

முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் அவர் இரண்டு பங்களாக்களை பயன்படுத்தி வருகிறார். முன்னாள் முதல்வர்கள் தங்கள் அரசு பங்களாக்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது உத்தர பிரதேசத்திற்கு மட்டும் அல்ல. இந்தியா முழுவதும் பொருந்தும். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தனது வாழ்நாள் முழுவதும் இந்த பங்களாவில் குடியிருக்க வசதியாக சட்ட விதிமுறைகளை மீறி ராஜே அரசு புதிய தீர்மானத்தை ெகாண்டு வந்து இருக்கிறார். மேலும், முதல்வர் இல்லத்திற்கு அதிக அளவு அரசு பயணத்தை பயன்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அதேபோல் எண் 13வது வீட்டிற்கும் 4 ஆண்டுகளாக அதிக அளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை கொடுத்துவிட்டு வெளியேவந்த பின் கன்சியாம் திவாரி எம்எல்ஏ கூறும்போது,’ மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர் கல்யாண் சிங் உபி முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்ட பங்களாவை நான் காலி செய்து விட்டேன். உச்ச நீதிமன்ற உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்று ெதரிவித்தார்’ என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக...