×

எச்-4 விசா ரத்து நடைமுறை இறுதி கட்டத்தில் உள்ளது

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்கிறவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. அந்த விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கை துணைகளுக்கு எச்-4 விசா கொடுக்கப்பட்டு, அதன் மூலம் அவர்களும் அமெரிக்காவில் பணி புரியலாம் அல்லது சொந்த தொழில் செய்யலாம் என்ற அனுமதியை கடந்த 2015ம் ஆண்டு முந்தைய அதிபர் ஒபாமா கொண்டு வந்தார். தற்போது அதை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். எச்-4 விசா ரத்து நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை பெடரல் நீதிமன்றத்தில், ‘எச்-4 விசா ரத்து நடைமுறை இறுதி கட்டத்தில் உள்ளது’ என கூறியுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!