×

அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் 28ம் தேதி நடக்கிறது

சென்னை, மே 26: அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த சட்டமன்ற கூட்டம் வருகிற 29ம் தேதி முதல், ஜூன் 9ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அதிமுக எல்எம்ஏல்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு பதில் அளிக்க வேண்டும், வேறு எந்த பிரச்னைகளிலும் ஈடுபடக்கூடாது என்பது குறித்த ஆலோசனை கூட்டம், வரும் 28ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும், என கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4...