×

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த வன்னியர் சங்கத் தலைவர் காடு வெட்டி குரு மரணம்

சென்னை: சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 58.   நுரையீரல் தொற்று காரணமாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் 14ம் தேதி உடல்நிலை மோசமடைந்ததால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நுரையீரல், சிறுநீரகம், இருதய சிகிச்சை வல்லுனர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குரு காலமானார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி மருத்துவமனைக்கு சென்று, குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.  அதன்பின் அவரது உடல் சொந்த ஊரான ஜெயங்கொண்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள காடுவெட்டி குருவின் சொந்த கிராமம். இவரது மனைவி சொர்ணலதா. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். பியூசி முடித்துள்ளார்.  2001ல் ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் வெற்றி பெற்றார். 1996, 2006ம் ஆண்டில் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பாமகவில் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கி வந்தார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கு நெருக்கமானவராக இருந்தார். குரு சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு ராமதாஸ் செயல்படுவார். குருவின் மறைவிற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...