×

நீட் தேர்வு வயது வரம்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: விரைவில் விசாரணை

புதுடெல்லி: நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் எழுத முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவு தேர்வு எழுதுவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் வயது உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது.  இது தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், நீட் தேர்வு எழுதும் துப்பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதும் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கு தடை விதிக்கக்கோரி கேரளாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கீதா ஜீவன் என்பவர் நேற்று மேமுறையீடு மனு தாக்கல் செய்தார். இதை கோடைக்கால அமர்வு விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ பட்டமேற்படிப்புக்கு நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு கடந்த 18ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 41.95 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை தாங்களே நிரப்பிக் கொள்ள அனுமதிக்கக் கோரி, அம்மாநில சுயநிதி மருத்துவ கல்லூரிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், ‘நீட் தேர்வு மெரிட் பட்டியல் அடிப்படையில் காலியிடங்களில் மாணவர் சேர்க்கையை வரும் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கலாம்’ என பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கான்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர், சுயநிதி கல்லூரிகளின் மனுவை தள்ளுபடி செய்து, நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...