×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஐகோர்ட் நீதிபதி விசாரணை தேவை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே  பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென  முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுவையில் முழு அடைப்பு  போராட்டத்தின்போது, புதிய பஸ் நிலையம் அருகே மறியல் செய்து கைதான திமுக  எம்எல்ஏ சிவா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை  சேர்ந்தவர்கள் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை புதுவை  முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது  துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. 

புதுவையில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது  செய்துள்ளனர். முதல்வராக அல்ல காங்கிரஸ் கட்சியின் தொண்டன் என்ற முறையில்  கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து பேசினேன். தூத்துக்குடி துப்பாக்கி  சூடு சம்பவத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்  அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் தற்போது பணியில் இருக்கும் நீதிபதி  தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்றார்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...