×

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்கிறது

மேட்டூர்: நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.  காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், துணை நதியான பாலாறு பகுதியிலும் மழை பெய்து வருவதால், கடந்த 22ம் தேதி முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1299 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 2491 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம், நேற்று முன்தினம் 32.94 அடியாக இருந்தது, நேற்று 33.31 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 8.90 டிஎம்சியாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 3500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 2000 கனஅடியாக சரிந்தது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சிவகாசி அருகே செங்கமலபட்டியில் வெடி...