×

புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு வழக்கு 5 முஜாகிதீன் தீவிரவாதிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு: என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

பாட்னா: புத்தகயா குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 5 பேரை குற்றவாளிகளாக என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.  பீகார் மாநிலத்தில் உள்ள புத்த மதத்தினரின் புனிததலமான புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி தொடர்ந்து 10 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் புத்த துறவிகள் உள்பட பலர் காயம் அடைந்தனர். கோயிலும் சேதமடைந்தது. இது தொடர்பாக இந்தியன் முஜாகிதீன்  அமைப்பை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு பாட்னாவில் உள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் சின்ஹா நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இம்தியாஸ் அன்சாரி, ஹைதர் அலி, முஜிப் உல்லா, ஓமர் சித்திக், அசாருதீன் குரேஷி ஆகிய 5 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இவர்கள், சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுதல் மற்றும் வெடிகுண்டு வைத்தல் ஆகிய சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக றிவிக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 31ம் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய 6வது குற்றவாளியான சிறுவன் தபிக் அகமதுவை 3 ஆண்டு வீட்டுக்காவலில் அடைக்க சிறுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...