×

உலகின் உயரமான 6 மலைகளின் உச்சியை அடைந்து அர்ஜுன் வாஜ்பாய் சாதனை

காத்மாண்டு: உலகின் 3வது உயரமான கஞ்சஞ்ஜெங்கா மலையில் இளம் வயதில் ஏறி, இந்தியாவை சேர்ந்த அர்ஜூன் வாஜ்பாய் சாதனை படைத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள 8,000 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள மலைகளின் உயரத்தை அடைவதன் மூலம் மலையேற்றத்தில் ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டத்தை வெல்ல முடியும். இந்த பட்டத்தை நேபாளத்தின் சாங் தாவா செர்பா என்பவர் தனது 30வது வயதில் அடைந்தார்.  சாங்கின் சாதனையை முறியடிக்க இந்தியாவின் மலையேற்ற வீரரான அர்ஜுன் வாஜ்பாய் களமிறங்கி உள்ளார். கடந்த 2010ல் தனது 16வது வயதில் இவர் சாதனை பயணத்தை தொடங்கினார்.

கடந்த 20ம் தேதி காலை 8.05 மணிக்குஉலகில் 3வது உயரமான 8,586 மீட்டர் உயரமுள்ள கஞ்சஞ்ஜெங்கா  மலையை இவர் அடைந்தார். மீண்டும் மலையின் அடிப்பகுதியை நேற்று முன்தினம் காலை அடைந்தார். இதன் மூலம் மிகக்குறைந்த வயதில் உலகின் உயரமான 6 மலைகளின் உச்சியை அடைந்த பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. ஆனால், 8,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள உலகின் 14 மலைகளை அடைந்த பிறகே தனது  சாதனை நிறைவுபெறும் என்று தெரிவித்துள்ளார்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்