×

நகரங்களில் மெட்ரோ ரயில்களின் தேவையை நிறைவேற்ற தனியார் முதலீட்டாளர்களுக்கு கதவு திறந்து விடப்படும் : மத்திய அமைச்சர் தகவல்

சென்னை : நகரங்களில் மெட்ரோ ரயில்களின் தேவையை நிறைவேற்ற தனியார் முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் கதவு திறந்து விடப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார். நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டி.எம்.எஸ். இடையே பயணிகள் மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது: நகரங்கள் பொருளாதார வளர்ச்சியின் இன்ஜின்கள் என்றால், போக்குவரத்து முறைகள், இன்ஜின்களின் சக்கரங்களாக செயல்படுகின்றன.

எனவே நல்ல மற்றும் திறனுள்ள போக்குவரத்து முறைகள் நம் நகரங்களுக்கு அவசியம். பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, புதிய மெட்ரோ ரயில் கொள்கை 2017க்கு ஒப்புதல் அளித்தது. இந்த கொள்கையின்படி ஏராளமான நகரங்களில் மெட்ரோ ரயில்களின் தேவையை நிறைவேற்ற உதவும். இந்த கொள்கையின்படி தனியார் முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் கதவு திறந்து விடப்படும். தனியார் பங்களிப்புடன் தான் மத்திய அரசின் உதவியை பெற முடியும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பெரிய முதலீடுகளுக்கு தனியார் மற்றும் பிற புதுமை முறைமைகள் அவசியமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...