×

பிஇ ஆன்லைன் பதிவு ஜூன் 2 வரை நீட்டிப்பு

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து பிஇ, பிடெக் ஆன்லைன் விண்ணப்பம் பதிவு ஜூன் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் பெற்று வருகிறது. நேற்று வரை சுமார் 1 லட்சத்து 12 ஆயிரத்து 959 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிறகு அங்கு இணைய தள வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நாள் ஜூன் 2ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...