×

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இயக்குனர் கவுதமன் உள்பட 41 பேர் உண்ணாவிரதம் : புழல் சிறையில் பரபரப்பு

சென்னை : தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியறுத்தி, பொதுமக்கள் நடத்திய பேரணியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், 13 பேர் பலியாகினர். இதை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 9 பேர் கடந்த 23ம் தேதி இரவு கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல், இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 30 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  

இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 39 பேர் மற்றும் ஏற்கனவே சிறையில் இருந்து வரும் மாவோயிஸ்ட்டுகள் தசரதன், வெற்றி வீரபாண்டியன் ஆகிய 41 பேர் நேற்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் ஜெயிலர் உதயகுமார் அவர்களை சந்தித்து காலை உணவை சாப்பிட வலியுறுத்தியும் மறுத்துவிட்டனர்.இதனால் புழல் சிறையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...