×

ஆசிரியர் பயிற்சி தேர்வு ஜூன் 4ல் தொடக்கம்

சென்னை : தொடக்க கல்வி பட்டய (D.T.Ed) படிப்பு படித்து வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதியும், முதலாண்டு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் தேர்வுகள் தொடங்குகின்றன. தமிழகத்தில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் டிடிஎட் என்னும் தொடக்க கல்வி பட்டயப் படிப்பு படித்து வருவோரில் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் ஜூன் 4ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிகின்றன.

முதலாண்டு, வகுப்பில் படித்து வரும் மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் ஜூன் 5ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள், தக்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 28ம் தேதி முதல் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...