×

மே 28ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் : கொறடா சக்கரபாணி அறிவிப்பு

சென்னை : திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மே 28ம் தேதி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக சட்டமன்ற கட்சிக் கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நேற்று நடந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்துக்கு பின் மே 29ம் தேதி முதல் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த துறைகளுக்கு விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்நிலையில் சட்டப்பேரவை நடவடிக்கைகள், மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்பாக விவாதிக்க மே 28ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி கூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மே 28ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...