×

ரோலண்ட் கேரோஸ் கிராமத்தில் நடால்...

டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. பிரதான சுற்று நாளை தொடங்க உள்ள நிலையில், முன்னணி வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ரோலண்ட் கேரோஸ் விளையாட்டு கிராமத்துக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரெஞ்ச் ஓபனில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்ற சாதனை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) கலந்து கொண்டார். ரசிகர்கள் புடைசூழ உற்சாகமாக வருகிறார் நடால். அவர் தனது முதல் சுற்றில் உக்ரைன் வீரர் அலெக்சாண்டர் டோல்கபோலோவை எதிர்கொள்கிறார்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1