×

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் நிபா வைரஸ் பீதி

மங்களூர்: கேரளாவை அச்சுறுத்தி வரும் நிப்பா வைரஸ், கர்நாடக மாநிலத்துக்கும் பரவியிருப்பதாக மக்களிடையே பீதி ஏற்பட்டு உள்ளது.கேரளாவில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில், நிப்பா என்ற கொடிய வைரஸ் பரவியதில், 16 பேர் உயிரிழந்தனர். வவ்வால் மூலம் பரவும் இந்த நோய் மலேசியாவிலிருந்து கேரளாவுக்கு பரவியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், அண்டை மாநிலமான, கர்நாடகாவின், மங்களூரைச் சேர்ந்த, 20 வயது பெண் மற்றும் 75 வயது முதியவரை, நிப்பா வைரஸ் தாக்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இருவரும், நிப்பா வைரசால் பாதிக்கப்பட்ட உறவினரை சந்திக்க, கேரளா சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

இருவருக்கும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, நிப்பா வைரஸ், கர்நாடக மாநிலத்துக்கும் பரவிவிட்டதாக, மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர், முதன் முதலில், நிப்பா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதே குடும்பத்தை சேர்ந்த, மூசா, 61, நிப்பா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து கேரள மாநிலத்தில் நிப்பா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்...