×

அணு ஆயுதக் கூடத்தை நிர்மூலமாக்கிய வடகொரியா : வீடியோ காட்சிகள் வெளியீடு

பியொங்யாங்: வடக்கொரியா உடனான பேச்சுவார்த்தையை அதிபர் டிரம்ப் ரத்து செய்வதாக அறிவித்துள்ள நிலையில் புங்யே-ரி அணு ஆயுதக்கூடத்தை தகர்த்த வீடியோ காட்சியை வடகொரியா வெளியீட்டுள்ளது. அணு ஆயுதக் கூடம் அழிக்கும் காட்சிகளை பார்வையிட்டு உறுதி செய்ய உலகின் முக்கிய ஊடகங்களுக்கு வடகொரியா அரசு அழைப்பு விடுத்திருந்தது. அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதால் சுற்றுப்புரங்களில் எவ்வித கதிர் வீச்சு பாதிப்பும் ஏற்படவில்லை என்று வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுதக்கூடத்தை தகர்த்துள்ள வடகொரியா அமெரிக்காவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளது. இதனிடையே அமைதி பேச்சுவார்த்தையை டிரம்ப் ரத்து செய்ததை கண்டித்து தென்கொரியா தலைநகர் சியோலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடகொரியா, அமெரிக்க கைதிகள் 3 பேரை விடுவித்ததுடன் புங்யே-ரி அணு ஆயுதக் கூடத்தை தகர்த்து இருக்கிறது. இருப்பினும் அமெரிக்கா தன்னிச்சையாக சிங்கப்பூர் பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தென்கொரிய மக்கள் கூறியுள்ளனர். திட்டமிட்டப்படி சிங்கப்பூர் பேச்சுவார்த்தையை அதிபர் டிரம்ப் முன்னெடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கேட்டுக்கொண்டனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்