×

தூத்துக்குடி சம்பவம் குறித்து CBI விசாரிக்க கோரிய வழக்கு : பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து CBI விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அரசு தரப்பு, தூத்துக்குடியில் அமலில் உள்ள 144 தடை உத்தரவு இரண்டு நாட்களில் விலக்கி கொள்ளப்படும் என்றது. தூத்துக்குடியில் தற்போது சூழல்நிலை எப்படி உள்ளது என நீதிபதிகள் வினவினார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், அமைதிக்குழு அமைக்கப்பட்டு தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தெரிவி்த்தார்.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இணையதள சேவை தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்த்தும்மனுவில்முறையிடப்பட்டிருந்தது.வழக்கறிஞர் சூரிய பிரகாசத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரும் 30-ம் தேதிக்குள் இவ்வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...