×

தகவல்கள் திருட்டு வழக்கு : இழப்பீட்டு வழங்க முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

ப்ருஸெல்ஸ்: வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீட்டு தொகை வழங்க முடியாது என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவாக, ஃபேஸ்புக் சமூக வலைதளத்திலிருந்து, பல லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டன. அவர்களது அரசியல் தொடர்பான விருப்பு, வெறுப்புகளை அறிந்து, அதற்கேற்ப பிரசார யுக்தியை, பிரிட்டனைச் சேர்ந்த, கேம்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மேற்கொண்டது. தகவல் திருட்டை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பும் கேட்டார்.

மேலும் இதுதொடர்பாக, சட்ட வல்லுனர்கள் முன்னிலையில், மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கமளித்தார். ஆனால் அவரது விளக்கத்தில் சட்ட வல்லுனர்கள் அதிருப்தி அடைந்ததாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் நம்பிக்கை துரோகம் தான் என்றும், இருப்பினும் வங்கி விவரங்கள் ஏதும் பரிமாறப்படவில்லை என்றும், ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீட்டு தொகை வழங்க முடியாது எனவும் தனது அறிக்கையில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...