×

சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்து கொன்ற யானை : ஆட்சிக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு என ஆன்மீகவாதிகள் கருத்து

சமயபுரம்: சமயபுரத்தில் மதம் பிடித்து அட்டகாசம் செய்து வந்த யானை மசினி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மசினி யானை தனது பாகனான கஜேந்திரனை மிதித்து கொன்று விட்டது. இதனையடுத்து பயிற்சி பெற்ற பாகன்கள் 6 பேர் இணைந்து யானைக்கு உத்தரவிட்டு அதனை தற்போது கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். ஜெயா என்ற யானை வரவழைக்கப்பட்டு, மதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை மசினி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.மதம் பிடித்ததையடுத்து சமயபுரம் கோயிலில் இருந்து யானை மசினி வேறு இடம் மாற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக யானை மசினி தாக்கியதில் பாகனான கஜேந்திரன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். திடீரென யானைக்கு மதம் பிடித்து தாக்க துவங்கியதில் கோயிலுக்கு வந்த பக்தர்களில் பலர் காயமடைந்துள்ளனர். யானை விரட்டியதில் தடுமாறி விழுந்த பக்தர்கள் பலர் காயமடைந்துள்ளனர். வெள்ளிகிழமை என்பதால் சமயபுரம் அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மதம் கொண்ட யானையின் பெயர் மசினி. மசினி தொடர்ந்து மக்களை விரட்டி தாக்கி வந்தது. பாகனையே யானை கொன்று விட்டதால், அதனை அடக்க ஆளில்லாமல் சிக்கல் ஏற்பட்டது. எனவே யானையை அடக்கும் பயிற்சி பெற்றவர்கள் சமயபுரத்திற்கு விரைந்தனர். இதனிடையே யானை தாக்கி பாகன் பலியானதை அடுத்து சமயபுரம் கோயில் நடை அடைக்கப்பட்டது.

இதனிடையே சமயபுரம் கோயிலுக்குள் யானை மிதித்து உயிரிழந்த பாகன் கஜேந்திரனின் உடல் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட அவரது உடல் ஆம்புலன்ஸில் எடுத்து செல்லப்பட்டது. பாகன் இறந்து விட்டதால் யானை மசினிக்கு எதனால் மதம் பிடித்தது என பிறரிடம் விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

நாட்டுக்கு நல்லதல்ல:

கோயிலுக்குள் பாகனை யானை மிதித்து கொன்றுள்ளது நாட்டுக்கு நல்லதல்ல என ஆன்மிகவாதிகள் கூறியுள்ளனர். கோயிலி்ல் யானை யாரையாவது கொன்றால் மன்னருக்கு ஆபத்து என்பது திருமூலர் வாக்கு என குறிப்பிட்டுள்ளனர். கோயிலுக்குள் நடந்துள்ள இந்த சம்பவத்தால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அமைச்சர் தப்பினார்:

சமயபுரத்திற்கு சற்று நேரத்திற்கு முன்னர் தான் அமைச்சர் துரைக்கண்ணு வந்து சென்றுள்ளார். அவர் சென்ற சற்று நேரத்தில் யானைக்கு மதம் பிடித்துள்ளது. சில நிமிடங்கள் அவர் தாமதமாக புறப்பட்டிருந்தாலும் யானையின் ஆவேசத்திற்கு அவரும் ஆளாகியிருப்பார் என அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர். 


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...