×

எப்போது வேண்டுமானாலும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: வடகொரியா அரசு அறிவிப்பு

பியோங்கியாங்: கிம் ஜாங் உன் உடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரிய அரசு அறிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில் திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதனையடுத்து வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், எப்போது வேண்டுமானாலும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வடகொரிய வெளியுறவு துறை அமைச்சர் கிம் கை குவான், வடகொரிய அதிபருடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். மேலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை தீர்க்க நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பர்கினோ பாசோவில் அரசுக்கு எதிராக...