×

இந்தோனேஷியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி 5 நாள் பயணம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வருகிற 29ம் தேதி முதல் ஐந்து நாட்கள் இந்தோனேஷியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வெளியுறவு துறை கிழக்கு செயலாளர் ப்ரீத்தி சரண் கூறுகையில், ஜூன் 1ம் தேதி சிங்கப்பூரில் நடக்கும் ஷான்கிரி-லா பேச்சுவாரத்தையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக  அழைக்கப்பட்டு இருக்கும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பில் இந்தியாவின் கொள்கைள் குறித்து தெரிவிப்பதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
 
பிரதமர் மோடி இந்தோனேஷியா செல்வது இதுதான் முதல் முறையாகும். சிங்கப்பூர் செல்வது இரண்டாவது முறையாகும். இந்த சுற்றுப்பயணத்தின்போது இரு நாடுகளுடனும் பல்வேறு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி ைகயெழுத்திடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மோடி பயண செலவு  தகவல் கூற தாமதம்: லோகேஷ் பத்ரா என்பவர் பிரதமர் மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை வெளிநாடு பயணத்துக்கு பயன்படுத்தியதற்காக ஏற்பட்ட செலவு குறித்த விவரங்களை கேட்டு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விமான படை தலைமையகத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும், பொது அதிகாரிகள் இந்த விமானங்களை பயன்படுத்தினால் எவ்வளவு செலவாகும் என்ற விவரங்களையும் கேட்டு இருந்தார். 7 மாதங்கள் கழிந்த நிலையில் பிரதமர் மோடியின் வெளிநாடு பயண செலவுகள் இந்திய தூதரகம்தான் கவனிப்பதாகவும் அது தொடர்பான விவரங்கள் தன்னிடம் இல்லை என்றும்  லோகேஷ் பத்ரவிற்கு இந்திய விமான படை தெரிவித்துள்ளது. இது குறித்து லோகேஷ் பத்ரா மத்திய தகவல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், விமானப்படை தலைமையகம் மற்றும் மேற்கு விமான தலைமையகமும் சரியான தகவல் தராமல் காலம் தாழ்த்தியுள்ளதை கண்டித்துள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ரூ.1823 கோடி வரி பாக்கி – காங்கிரஸ் கண்டனம்