×

அமெரிக்கா - வடகொரியா இடையே நடைபெற இருந்த சிங்கப்பூர் பேச்சுவார்த்தை திடீர் ரத்து: அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜங் இடையே சிங்கப்பூரில் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா அதிபர் கிம் ஜங் உன்னும் அடுத்த மாதம் 12ல் சிங்கப்பூரில் சந்தித்து பேச திட்டமிட்டனர். இடம், தேதி முடிவான நிலையில் வடகொரியா கைவசம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் அழிக்க வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்தது. இது வடகொரியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிபந்தனைகளை தளர்த்தாவிட்டால் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்தது. இதனால், சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடக்குமா என்பதில் சந்ேதகம் ஏற்்பட்டது. இது தொடர்பாக அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என டிரம்ப் கூறினார்.

இந்த சர்ச்சை ஒய்வதற்குள்ளாக, ‘லிபியாவை போல வடகொரியா முடிவை தேடிக்கொள்ளும்’ என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியிருந்தார். இதற்கு வடகொரியா ‘அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் பேச்சு, ஒன்றும் தெரியாத முட்டாள் பேசுவதைப் போல் உள்ளது’ என்றது.  இந்த சூழ்நிலையில் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இரவு அறிவித்தார். இதுதொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜங் உன்னுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘சமீபத்தில் உங்கள் தரப்பு பேச்சுக்கள் கோபத்தை ஏற்படுத்துவதாகவும், ஆத்திரமூட்டுவதாகவும் உள்ளன. எனவே சிங்கப்பூர் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு
வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அடுத்த மாதம் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதை முன்னிட்டு தனது அணு ஆயுத மையங்களை மூட உள்ளதாக அதிபர் கிம் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, வடகொரியாவின் வடக்கில் அமைந்துள்ள புங்யே-ரி அணு ஆயுத சோதனை மையம் நேற்று வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்டது. இதை பார்வையிட பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...