×

உக்ரைனில் 2014ம் ஆண்டு மலேசியா பயணிகள் விமானத்தை ரஷ்ய படைதான் சுட்டு வீழ்த்தியது: கூட்டு விசாரணைக் குழு முடிவு

உட்ரெக்ட்: மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச் 17 விமானத்தை கடந்த 2014ம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ராணுவத்தின் பக்-டெலர் ஏவுகணைதான் என விசாரணை குழு முடிவு செய்துள்ளது. உக்ரைனில் கடந்த 2014ம் ஆண்டு அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்ட போது, கிரீமியா பகுதி மக்கள் ரஷ்ய கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனால், ரஷ்யா ராணுவ படைகள்  கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு உக்ரேன் பகுதிக்குள் ஊடுருவி கிரீமியா பகுதியை மீண்டும் ரஷ்யாவுடன் இணைத்தது. அந்தாண்டில் ஜூலை 17ம் தேதி, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச் 17 விமானம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பயணிகளுடன் சென்றது. இந்த விமானம் கிழக்கு உக்ரைன் வழியாக சென்றது.

அப்போது ஒரு ஏவுகணை இந்த விமானத்தை தாக்கியதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். ரஷ்யாவின் பக் ரக ஏவுகணைதான் மலேசிய விமானத்தை தாக்கியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இதை ரஷ்ய ராணுவம் மறுத்தது. எனவே, மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு யார் காரணம் அறிய கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இது குறித்து நெதர்லாந்தைச் சேர்ந்த விசாரணை என அதிகாரி வில்பர்ட் பாலிசன் கூறுகையில், ‘‘ரஷ்யாவின் குர்ஷ்க் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 53வது பிரிவின் விமான எதிர்ப்பு ஏவுகணை பிரிவிலிருந்துதான் பக்-டெலர் ரக ஏவுகணை ஏவப்பட்டுள்ளது என கூட்டு விசாரணைக் குழு முடிவு செய்துள்ளது. இந்த ஏவுகணைதான் கிழக்கு உக்ரைன் வழியாக சென்று மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது’’ என்றார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அர்ஜெண்டினாவில் அரசு...