×

மக்கள் போராட்டம் வெற்றி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் அறிவித்தார். ஆலையை மூடுவதற்கு முன்னதாக மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுசூழல் அமைப்பு அதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.

தூத்துக்குடியில் நேற்றும் முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் 100 நாள் போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி நிலைமை திரும்ப ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...