×

அலுவல் ஆய்வு கூட்டம் தவறு என சுட்டிக்காட்டத்தான் போராட்டம் : ஸ்டாலின் விளக்கம்

சென்னை: இந்த நேரத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் தவறு என சுட்டிக்காட்டத்தான் போராட்டம் நடத்தப்பட்டது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துக்குடி மக்கள் பாதித்துள்ள நிலையில் அலுவல் ஆய்வு கூட்டம் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ள முதல்வர் தேவையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினர். நீங்கள் ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும், பதவியை விட்டு விலகுங்கள் என்று அவர் கூறினார்.

முதல்வரிடம் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறிவிட்டு வெளிநடப்பு செய்ததாக கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைக்கவோ, மனு அளிக்கவோ தாம் செல்லவில்லை எனவும் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். முதல்வர் உடனே புறப்பட்டு தூத்துக்குடி செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முற்றுகையிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சொந்த நாட்டு மக்களை சமூக விரோதிகள் எனக்கூறும் முதல்வரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...