தூத்துக்குடியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும் : ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

டெல்லி : தூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தூத்துக்குடி போராட்டத்தின் போது நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி மிகவும் வேதனை அடைந்ததாக அவர் கூறினார்.

உள்துறை அமைச்சகம் தானாக முன் வந்து தூத்துக்குடி சம்பவம் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் கேட்டுள்ளது என்றார். மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்தார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

× RELATED உ.பி. காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம்