தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் கமாண்டோ படையினர் குவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகர் 4, 5, 6-வது தெருக்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு டாஸ்மாக் கடை தீவைப்பு உள்ளிட்ட வன்முறைகளால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பெட்ரோல் குண்டுகள் வீசபட்டதால் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடிக்கு தமிழக அதிரடிப்படை வீரர்கள் வருகை தந்துள்ளனர். கூடுதல் பாதுகாப்புக்காக 60 அதிரடிப்படை வீரர்கள் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் அண்ணாநகர் பகுதியில் கமாண்டோ படையினர் அணிவகுப்பை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

× RELATED 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் ...