×

பொன்.புதுப்பட்டி உடையப்பிராட்டி அம்மன் கோயிலில் மாம்பழ தேரோட்டம்

பொன்னமராவதி: பொன்னமராவதியில் உள்ள பொன்.புதுப்பட்டி உடையப்பிராட்டி அம்மன் கோயிலில் மாம்பழத் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த பொன்.புதுப்பட்டி உடையப்பிராட்டி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்களால் நடைபெற்று வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று (23ம் தேதி) மாலை மாம்பழத் தேரோட்டம் நடந்தது. தேரோட் டத்தை முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜா அம்பலகாரர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேர்முட்டிவீதியில் தொடங்கி மேலரதவீதி, நகைக்கடை வீதி மற்றும் முக்கிய வீதி வழியாகச் தேர் சென்று நிலையை வந்தடைந்தது. தேர் சென்ற பகுதிகளில் வீட்டின் மாடிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மாம்பழங்களை வீசினர். இதனை பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு பிடித்து மகிழ்ந்தனர். பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு...