×

கோவை, நீலகிரியில் தொடர் மழை எதிரொலி : 3 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ளது. இந்த ஆண்டு கோடை மழை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை நீடிக்கிறது. இதனால் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது அணையில் 85.25 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் இந்த ஆண்டு முழுவதும் மூன்று மாவட்டங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று தெரிகிறது. பில்லூர் அணை கோவை , திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இதனிடையே மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீசிய சூறாவளிக்காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதியில் நநேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மழை பெய்து கொண்டிருந்த போது காற்றின் வேகம் அதிகரித்தது. அதனால் திருநகர், பாலாஜி நகர் சுந்தரம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் கீழே விழுந்தன. இதனைத் தொடர்ந்து மின்சாரம் நிறுத்தப்பட்டது.

மேலும் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்ததில் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்தன. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் பொது மக்கள் உதவியுடன் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கீழே விழுந்த ஏராளமான மின்கம்பங்களை சீரமைத்த பிறகே மின் இணைப்பு வழங்கப்படும் என்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி...