×

உத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல்

டெல்லி : சர்வதேச அளவில் தரமான வசதி கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 145வது இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் மருத்துவ வசதி மக்களுக்கு எளிதாக கிடைக்கிறதா என்பது குறித்து மொத்தம் 195 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2000 ஆண்டுகள் முதல் 2016 ஆண்டு வ்ரை இந்தியாவில் மருத்துவத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்றும் கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் மருத்துவ சேவை சிறப்பாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மோசமாகி உள்ளது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  மேலும் இந்திய மருத்துவத்துறைக்கு, இதயநோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்னை, கேன்சர் ஆகியவை பெரும் சவாலாக விளங்குவதாகவும், இந்நோய்களை தீரப்பதில் இந்தியா தடுமாற்றத்துடன் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா (48), இலங்கை (71), வங்காளதேசம் (133) ஆகிய நாடுகளைவிட இந்தியா தரமான மருத்துவ வசதி கொடுப்பதில் பின்தங்கியுள்ளது. இதனிடையே மற்ற நாடுகளும் அதன் இடங்களும் பின்வருமாறு : சீனா (48), இலங்கை (71), வங்காளதேசம் (133), பூட்டான் (134), நேபாளம் (149), பாகிஸ்தான் (154) மற்றும் ஆப்கானிஸ்தான் (191). ஆகியவையாகும்.

இந்த ஆய்வில் உயர்தரமான மருத்துவ வசதி அளிக்கும் முதல் 5 நாடுகள் பின்வருபவை : ஐஸ்லாந்து (97.1 புள்ளிகள்), நோர்வே (96.6), நெதர்லாந்து (96.1), லக்சம்பர்க் (96.0), ஃபின்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா (ஒவ்வொன்றும் 95.9).மேலும் மத்திய ஆபிரிக்க குடியரசு (18.6), சோமாலியா (19.0), கினியா-பிசாவு (23.4), சாட் (25.4), மற்றும் ஆப்கானிஸ்தான் (25.9) ஆகிய நாடுகள் குறைந்த தரமான மருத்துவ வசதி அளிக்கப்பட உள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...