×

கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி : விரைவில் ஃபிட்னஸ் வீடியோ வெளியிடுவதாக தகவல்

டெல்லி; மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ' நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா ஃபிட்டாக மாறும்' என சமூக வலைதளத்தின் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதன்படி ஃபிட்னஸ் சேலன்ஜ் #FitnessChallenge என்ற ஹேஷ்டேக் மூலம், இந்தியர்கள் தங்களது உடற்பயிற்சி முயற்சிகளை சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக பதிவிட கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் இடைவிடாது 10 முறை புஷ் அப் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு, நடிகர் ஹிருத்திக் ரோஷன், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு தம்மை போல செய்து வீடியோ வெளியிடுமாறு ஃபிட்னஸ் சவால் விடுத்தார்.

இதனை ஏற்ற விராட் கோலி  தான் உடற்பயிற்சி செய்த வீடியோவை சமூகவலை தளங்களில் வெளியிட்டு தம்மை போல் செய்ய முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி, தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு ஃபிட்னஸ் சவால் விடுத்தார். இந்நிலையில் கோலியின் சவாலை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ள பிரதமர் மோடி, விரைவில் தனது ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்