×

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு

தூத்துக்குடி :தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையை அடுத்து மின்வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் விநியோகத்தை தடை செய்துள்ளது .காலை 5.15 மணி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கான 2வது அலகை தொடங்க கூடாது என்றும்  நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியானது, கடந்த மார்ச் 31ம் தேதியோடு முடிவடைந்தது. இதனையடுத்து அனுமதியை புதுப்பிக்க ஸ்டெர்லைட்  நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மனுவை மாசுகட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. தற்போது வரை மாசுகட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதியை வழங்கவில்லை, மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எதிர்ப்புக்களும் வலுத்துள்ளது.

 நேற்று முன்தினம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியது. இதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டங்களில் குதித்தனர். போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு, துப்பாக்கி சூடு என தூத்துக்குடியை கலவர நகரமாக மாறியது. இந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 12 பேர் உயிழந்துளளனர்.

இதனிடையே அனுமதி வழங்கப்படாத நிலையில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையை அடுத்து மின்வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கான விநியோகத்தை தடை செய்துள்ளது .காலை 5.15 மணி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது காற்று மற்றும் நீர் மாசுபாடு அடைவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...