சில்லி பாயின்ட்...

* தாமஸ் & உபேர் கோப்பை பேட்மின்டன் தொடரின் ஆண்கள் பிரிவில் இந்திய அணி 0-5 என்ற கணக்கில் சீனாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், மகளிர் பிரிவிலும் இந்திய அணி 0-5 என்ற கணக்கில் ஜப்பானிடம் வீழ்ந்து ஏமாற்றமளித்தது.
* நடப்பு ஐபிஎல் சீசனின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகளுமே கோப்பையை வென்ற அணிகளாகும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
* பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கான மகளிர் ஒற்றையர் பிரிவு தகுதிநிலையில் (சீடிங்ஸ்) நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு இடம் வழங்கப்படாத நிலையில், வைல்டு கார்டு சிறப்பு அனுமதியுடன் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
* மணிப்பூரில் நாட்டின் முதலாவது விளையாட்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
* பார்சிலோனா அணியில் இருந்து சமீபத்தில் விடைபெற்ற கேப்டன் இனியஸ்டா, ஜப்பானின் விஸெல் கோபே கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

× RELATED ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5,000...