×

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்?தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தலைமை செயலாளா்,டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக அரசு விளக்கமளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டின் போது நெறிமுறைகளை பின்பற்றாதது ஏன்? என விளக்கம் அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் இதுகுறித்து 2 வாரத்திற்குள் தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விதிமுறைகளை பின்பற்றப்பட்டதா ஏன் என்றும் கேள்வி எழுப்பப்ட்டுள்ளது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED திராவிட கட்சிகளை மோடியால் வெல்ல முடியாது: வைகோ பேட்டி