×

மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை: மே 25 தொடங்கி வைப்பு

சென்னை: சென்னையில் மேலும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை வரும். மே 25ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. சென்ட்ரல்-நேரு பூங்கா இடையே 2.7 கிலோ மீட்டர், தேனாம்பேட்டை-சின்னமலை வரை 4.5 கிலோ மீட்டருக்கு புதியதாக மெட்ரோ ரயில் சேவை வரும். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தொடர் ஆய்வு நடத்தி மெட்ரோ ரயில் சேவை தொடங்க சான்றிதழ் வழங்கியுள்ளார். இரு மார்க்கத்திலும் புதிய மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...