×

ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் போலீஸூம் மாவட்ட நிர்வாகமும் லஞ்சம் வாங்கிவிட்டதா? சசிகலா புஷ்பா கேள்வி

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் போலீஸூம் மாவட்ட நிர்வாகமும் லஞ்சம் வாங்கிவிட்டதா என தமிழக அரசுக்கு அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா கேள்வியெழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையால் நச்சு ஏற்பட்டு கேன்சர் போன்ற கொடிய நோய்கள் உண்டாகிறது. இதனை நிரந்தரமாக மூடவே மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்தும், போராட்டமும் நடத்துகின்றனர். ஆனால் மக்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பதால் போலீஸூம் மாவட்ட நிர்வாகமும் லஞ்சம் வாங்கிவிட்டதா என தமிழக அரசுக்கு சசிகலா புஷ்பா கேள்வியெழுப்பியுள்ளார். மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை லஞ்சம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 12 பேரின் உயிரை எடுப்பதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்றும் மனிதை உரிமை எங்கே சென்றது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதற்காக சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், யார் கலவரம் செய்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்த இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்.சிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு உத்தரவு வந்ததா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். 100 நாள் வரையில் பிரச்சனையை ஏன் இழுக்கிறீர்கள் என்றும் ஒரு நாளில் பிரச்சனையை தீர்த்து வைக்காத நிர்வாகம் என்ன நிர்வாகம் எனவும் அவர் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், 2013ல் தான் தாத்துக்குடி மேயராக இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்றும், ரூ.100 கோடி அபராதத்தை கட்டிவிட்டு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிட்டனர் எனவும் கூறியுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி...