×

விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை : தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிப்பதோடு உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ1 கோடியை தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை.யில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நீண்டகாலமாக போராடி வரும் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான, மனிதாபிமானமற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும், இன்னும் பல பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் வரும் செய்திகள் பேரதிர்ச்சியளிக்கின்றன. இந்தப் போராட்டம் ஏதோ திடீரென்று நடைபெற்ற போராட்டம் அல்ல. இன்று தூத்துக் குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என்பது முன்கூட் டியே காவல்துறையினருக்கு தெரிந்த ஒன்று. ஏறக்குறைய 20 ஆயிரம் பேருக்கு மேல் அதில் பங்கேற்பார்கள் என்பது மாநில உளவுத்துறைக்கும், மாவட்ட காவல்துறைக்கும், ஏன் தமிழ் நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.க்கும் தெரியாத ரகசியமான பேரணி அல்ல. ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வரும் அந்த மக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அழைத்துப் பேசியிருக்க வேண்டும்.  

தமிழக காவல்துறையை வழிநடத்தும் திறமைமிக்க தலைமையை இழந்து நிற்கும் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனுக்கும் புரியவில்லை என்பதுதான், இப்படி 10 பேருக்கும் மேற் பட்டோரின் உயிர்களை பறிக்கும் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடைபெற்றதற்கு காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மிகப்பெரிய மக்கள் பேரணியை தவிர்க்கும் பொருட்டு, அம்மக்களுடன் அங்குள்ள மாவ ட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட போலீஸ் அதிகாரி, ஏன் தென் மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களில் ஒருவர் கூட நேரில் சென்று சந்தித்து, போராடுவோரை அமைதிப்படுத்தியிருக்கலாம்.

துப்பாக்கிச்சூடு தொடர்பான செய்திகளை தொலைக் காட்சிகள் பத்திரிக்கைகள் வெளியிடக்கூடாது என்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் எச்சரித் திருப்பதும், அப்பாவி மக்கள் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு, துப்பாக்கிச்சூடு நடத்திட எங்கிருந்து உத்தரவு போயிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சகஜ நிலைமை திரும்பி விட்டது என்று பேட்டியளித்துக் கொண்டே, இன் னொருபுறம் சற்று முன்பு கூட அங்கே துப்பாக்கிச்சூடு நடத்தி, அதில் ஒருவர் இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குருவிகளை சுட்டுக் கொல்வது போல் மக்களை சுட்டு வீழ்த்தி விட்டு, மக்களின் உணர்வுக ளுக்கு இந்த அரசு மதிப்பளிக்கும் என்று முதல்வர் அறிக்கை விடுத்திருப்பது வெட்கக் கேடானது.

ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டு, காவல்துறையின் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க, உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணைய த்தை அமைக்க வேண்டும் எனவும், துப்பாக்கிச் சூட்டில் பலியான ஒவ்வொரு குடும்பத்திற் கும் தலா ரூ1 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.மக்கள் பேரணி பற்றி முன்கூட்டியே அறிந்தும் கோட்டை விட்ட, தமிழக காவல்துறையை வழிநடத்தும் தலைமைப் பண்பு இல்லாமல் இருக்கும், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.  டி.கே.ராஜேந்திரனை உடனடியாக பதவிநீக்கம் செய்து, புதிய காவல்துறை தலைவரின்கீழ் அங்கு சகஜ நிலைமையை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வை போக்கிட அமைச்சர்கள் அடங்கிய குழுவும், முதல்வரும் உடனடியாக தூத்துக்குடி செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…