×

தென் மேற்கு பருவமழை 25ல் துவங்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : தென் மேற்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் துவங்குவதற்கு சாதகமாக சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தென் மேற்கு அரபி கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக வலுப்பெறும். தொடர்ந்து, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு ஓமன்- தென் கிழக்கு ஏமன் இடையே வரும் 26ம் தேதி காலை கரையை கடக்கும்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் தென் மேற்கு பருவமழை துவங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சூழற்சி நிலவுகிறது. அதுமட்டுமின்றி, வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வடக்கு உள்தமிழகம், தெற்கு கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.

3 இடங்களில் சதம்
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 104 டிகிரி, திருச்சியில் 101.3 டிகிரியும், வேலூரில் 100.58 டிகிரியும் பதிவானது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...