×

நானோ தொழில்நுட்ப ஆய்வு மேம்பாடு

பெங்களூரு: பெங்களூருவில் நானோ தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. அதை தொடங்கி வைத்த விஞ்ஞானி சிவானந்த பல்லாள பேசும்போது, நாட்டின் விஞ்ஞானிகள் முயற்சியால் பல சாதனைகளை படைத்து வருகிறோம். விண்வெளி ஆராய்ச்சியில் நாம் செலுத்தி வரும் ஆர்வம் அதற்கு எடுத்து காட்டாகவுள்ளது.   நமது நாட்டின் பொருளாதாரம், சமூகம், உலகளவிலான மேம்பாட்டிற்கு அறிவியல் வளர்ச்சி மட்டுமே ஊன்றுகோளாக அமையும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அறிவியல் முக்கிய துணையாகவுள்ளது. எதிர்காலத்தில் ட்ரிலின் டாலர் வர்த்தகம் அறிவியல் வளர்ச்சி மூலம் நடக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் ஒன்றான புற்றுநோய்க்கு நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தி தரமான மருந்து தயாரிக்க முடியும். அதற்கான ஆராய்சியில் விஞ்ஞானிகள் முழுமையாக ஈடுபட வேண்டும்  என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...