×

சாதிக்க வயது அவசியமில்லை 12 வயதில் 1000 அரங்கேற்றம்

பெங்களூரு: பெங்களூருவில் 12 வயது சிறுவன் பரத நாட்டியத்தில் ஆயிரம் அரங்கேற்றம் நடத்தி சாதனை படைத்துள்ளார். அவரின் திறமையை பாராட்டி இன்று ஆர்யபட்டா விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. பெங்களூரு காட்டன்பேட்டை பகுதியில் வசிக்கும் ஜெகதீஷ்-ரேகா தம்பதியரின் மகன் மனு, சிறு வயதில் இருந்து பரத நாட்டியம் பயிற்சியில் ஈடுப்பட்டார். கர்நாடகம் மட்டுமில்லாமல் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் பல மேடைகளில் அரங்கேற்றம் நடத்தி பாராட்டு பெற்றுள்ளார். தனது 12 வயதில் ஆயிரம் அரங்கேற்றம் நடத்தி புதிய சாதனைப்படைத்துள்ளார். அவரின் திறமையை பாராட்டி 180க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளது.

பெங்களூருவில் இயங்கிவரும் ஆர்யபட்டா கலாச்சார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பல துறைகளின் சாதனைப்படைத்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆர்யபட்டா என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இவ்வாண்டு விருது வழங்கும் விழா இன்று மாலை 4.30 மணி்க்கு ரவீந்திர கலாஷேத்ராவில் நடக்கிறது. இதில் 60க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதில் பரத நாட்டிய கலைஞர் சிறுவன் மனுவுக்கும் விருது வழங்கப்படுகிறது. அவரின் 1001வது அரங்கேற்றம் அடுத்த மாதம் தமிழகத்தின் திருச்சியில் நடக்கிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...