×

பென்ஷன் கிடைக்காமல் பொருளாதார ரீதியாக இன்னலை சந்திக்கிறோம்: ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் குமுறல்

சென்னை: சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வளர்மதி, மவுளி மாலா ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்து கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் மழலையர் பள்ளிகளில் ஆசிரியராக 1998ம் ஆண்டு பணியில் சேர்ந்தோம். 96 ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தோம். எங்களை பகுதி நேர ஆசிரியர்கள் என்று குறிப்பிட்டு பென்ஷன் தர மறுத்து வருகின்றனர். காலை 8.45 மணிக்கு பணிக்கு சென்று மாலை 4 மணி வரை பணிபுரிந்துள்ளோம். வருகை பதிவேட்டில் தினமும் 2 முறை கையெழுத்திடுகிறோம். அவ்வாறு, இருக்க எப்படி எங்களை பகுதி நேர ஆசிரியராக குறிப்பிட முடியும்.

15 ஆசிரியர்கள் வரை பென்ஷன் உள்ளிட்ட எந்த சலுகைகளை பெறாமல் ஓய்வு பெற்றுவிட்டோம். இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனரிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. மழலையர் பள்ளிகளால் தான் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், எங்களுடைய முழு உழைப்பை பெற்று கொண்டு, உரிய சலுகைகளை கொடுக்காமல் மெத்தனமாக செயல்படுகின்றனர். அரசு தரப்பில் முறையிட்டால், கஜானாவில் பணம் இல்லை என்று கூறுகின்றனர். இதனால், நாங்கள் பொருளாதார ரீதியாக கடும் இன்னல்களை சந்தித்து வருகிறோம். எனவே, மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

மருத்துவ செலவுக்கு அல்லல்
ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரேமா கூறுகையில், ‘‘பென்ஷன் கொடுக்காததால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியவில்ைல. என்னுடைய கணவருக்கு கண் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ செலவுக்கு கூட பணமின்றி அல்லாடி வருகிறேன். போக்குவரத்துக்கு கூட பணம் இல்லாமல் முதியோர் பாஸ் வாங்கி சென்று வரும் நிலை உள்ளது’’ என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED யானை தாக்கி விவசாயி பலி