×

மகளிர் டி20 சேலஞ்ச் காட்சி போட்டி கடைசி பந்தில் சூப்பர்நோவாஸ் வெற்றி : டிரெய்ல்பிளேசர்ஸ் போராட்டம் வீண்

மும்பை : மகளிர் டி20 சேலஞ்ச் காட்சி போட்டியில், சூப்பர்நோவாஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டிரெய்ல்பிளேசர்ஸ் அணியை வீழ்த்தியது. மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடருக்கு முன்னோட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த காட்சி போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரெய்ல்பிளேசர்ஸ் அணியுடன், ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணி மோதியது. இரு அணிகளிலும் சர்வதேச வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர். டாசில் வென்ற சூப்பர்நோவாஸ் முதலில் பந்துவீசியது. டிரெய்ல்பிளேசர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன் குவித்தது. சூஸி பேட்ஸ் அதிகபட்சமாக 32 ரன் (37 பந்து, 2 பவுண்டரி) எடுத்தார். ஹீலி 7, மூனி 4, ஜெமிமா 25, தீப்தி 21, கேப்டன் மந்தனா 14 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். , ஷிகா பாண்டே 14, ஹேஸல் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சூப்பர்நோவாஸ் பந்துவீச்சில் ஷுட், பெர்ரி தலா 2, அனுஜா, ராஜேஷ்வரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சூப்பர்நோவாஸ், கடைசி பந்தில் வெற்றியை வசப்படுத்தியது. தொடக்க வீராங்கனைகள் மித்தாலி ராஜ் 22, வியாட் 24 ரன் விளாசினர்.

லான்னிங் 16, கேப்டன் ஹர்மான்பிரீத் 21, டிவைன் 19 ரன் எடுத்தனர். 14.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்திருந்த சூப்பர்நோவாஸ், மேற்கொண்டு 20 ரன்னுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்து வென்றது. பெர்ரி 13 ரன், வஸ்த்ராகர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிரெய்ல்பிளேசர்ஸ் பந்துவீச்சில் சூஸி பேட்ஸ், பூனம் யாதவ் தலா 2, ஜுலன், பிஷ்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆல் ரவுண்டராக ஜொலித்த டிரெய்ல்பிளேசர்சின் சூஸி பேட்ஸ் (32 ரன் மற்றும் 2 விக்கெட்) சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இவர் நியூசிலாந்தை சேர்ந்தவர். முதல் முறையாக சர்வதேச வீராங்கனைகள் இணைந்து விளையாடிய இந்த காட்சி டி20 போட்டி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இது தங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது என்றும், மகளிர் ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மனித உரிமைகள் பிரச்சனை காரணமாக...