×

தூத்துக்குடி போராட்டத்தை துப்பாக்கிச்சூடு வரை கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தது யார்? கமல் கேள்வி

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணி வன்முறையாக வெடித்தது. பேரணியில் ஈடுபட்ட போராட்டகாரர்களை தடுக்க போலீசார் முதலில் தடியடியில் ஈடுபட்டனர். போராட்டம் கட்டுபாட்டில் வராத காரணத்தினால் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 11 பேரை போலீஸ் சுட்டுக் கொன்றதால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி போராட்டத்தை துப்பாக்கிச்சூடு வரை கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தது யார் என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு பதில் கூறியே ஆக வேண்டும் என்று பேசினார். பள்ளி இறுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்த வெனிஸ்டா சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். சட்டத்தை மதிக்காமல் தூதுக்குடியை ஸ்டெர்லைட் மாசுபடுத்தி வருகிறது. தூத்துக்குடியில் நடந்த சோகத்தை தமிழகம் மறக்காது என்று கூறினார்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு,...