×

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரா நாளை துணை முதல்வராக பதவியேற்பார்: குமாரசாமி தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 15-ம் தேதி எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 104 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 38 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ், மஜத கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்தது. தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் பாஜவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று எடியூரப்பா ஆளுநரிடம் மனு அளித்தார். இதனை அடுத்து எடியூரப்பா பதவியேற்றார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திடீர் திருப்பமாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரமலேயே எடியூரப்பா ராஜினாமா செய்தார். இந்நிலையில் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்கவுள்ளார். குமாரசாமி அமைச்சரவையில்  காங்கிரசுக்கு 22 அமைச்சர் பதவியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 12 அமைச்சர்கள் பதவியும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநில காங். தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக நாளை பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...