×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை விரைகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

நீலகிரி: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற நீலகிரி சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணி வன்முறையாக வெடித்தது. பேரணியில் ஈடுபட்ட போராட்டகாரர்களை  தடுக்க போலீசார் முதலில் தடியடியில் ஈடுபட்டனர். போராட்டம் கட்டுபாட்டில் வராத காரணத்தினால் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 11 பேரை போலீஸ் சுட்டுக் கொன்றதால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இதனையத்து தூத்துகுடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். போராட்டத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இரங்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் அமைதியை பராமரிக்க மக்கள் ஒத்துழைக்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...