×

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

தூத்துக்குடி : தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10- ஆகா அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 10 பேரை போலீஸ் சுட்டுக் கொன்றதால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த துப்பாக்கிசூட்டில் மேட்டுப்பட்டி கிளாஸ்ட்ன (40), தூத்துக்குடி  கந்தையா (55), குறுக்குசாலை கிராமம் தமிழரசன்(28), ஆசிரியர் காலனி சண்முகம் (40), தாமோதர் நகர் மணிராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 17 வயது மாணவி உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவி வெனிஸ்டா உடல் என்று அடையாளம் தெரியவந்துள்ளது. வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் மாணவி வெனிஸ்டா உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 2 பெண்கள் பலியாகியுள்ளனர். திரேஸ்புரத்தில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கிச் சூட்டில் வினிதா(29) என்ற மாணவி உயிரிழந்தார்.

மேலும் சிலர் கவலைக்கிடம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் போராட்டக் காலமாகிறது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அடுத்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் உருவபொம்பையை எரித்து போராட்டம் நடத்தினர். சேலத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போலீஸ் மீது புகார்


துப்பாக்கிச் சூடு என்றால் முதலில் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிப்பதுதான் வழக்கம். வானத்தை நோக்கி சுட்டபின் கலவரம் அடங்காவிடில், இடுப்புக்கு கீழே சுடுவார்கள். ஆனால் தூத்துக்குடியில் 10 போரையும் மார்பில் சுட்டு கொன்றதாக போலீசார் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...