×

4 மணி நேரத்திற்கும் மேலாக பதற்றம் நீடிக்கிறது : ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைப்பு

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்கு தீவைக்கப்பட்டது.ஸ்டெர்லைட் ஊழியர்களின் 6 மாடி குடியிருப்புக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டதால் சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. குடியிருப்புக்குள் யாரும் சிக்கியுள்ளார்களா என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. குடியிருப்புக்குள் பிடித்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மேலும் 10-ம் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளது.

முன்னதாக போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைக்கப்ட்டது.

வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை


மீண்டும் ஒன்று திரண்ட போராட்டக்காரர்களை விரட்ட போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தவுள்ளனர். ஆகையால் முதலில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

3 முறை துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. முதல் முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 2-வது மற்றும் 3-வது முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய...